ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்கப் படைகள் ஈரானிய இலக்குகளைத் தாக்கியதை அடுத்து பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் போர்நிறுத்தத்தை நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாற்றும் முயற்சிகளுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் “என்னைப் பொறுத்தவரை அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இனி ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நேரத்தை வீணடிப்பதாகும்” என்று கடுமையாகக் குறிப்பிட்டார். ட்ரம்பின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்து அமெரிக்கா–ஈரான் உறவுகள் மேலும் மோசமடையும் என்ற அச்சத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது.

































