செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தும் ஹேக்கர்கள், பாதுகாப்பு அமைப்புகளை விட வேகமாகச் செயல்படும் அபாயம் இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் விமானப் போக்குவரத்து, வங்கிச் சேவைகள் மற்றும் அரசு அமைப்புகளில் ஏற்பட்ட இடையூறுகள் இந்த அச்சத்தை அதிகரித்துள்ளன. எனினும், இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த தீங்கிழைக்கும் நடவடிக்கையின் விளைவு என்பதற்கான ஆதாரம் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆறு நிலைகளில் சைபர் அச்சுறுத்தல் வகைப்படுத்தல்
அமெரிக்காவின் சைபர் சம்பவ தீவிரத்தன்மை வகைப்படுத்தலில் மொத்தம் ஆறு நிலைகள் உள்ளன. வெள்ளை நிலையில் உறுதிப்படுத்தப்படாத அல்லது முக்கியத்துவம் குறைந்த சம்பவங்கள் இடம்பெறும். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிலைகளைத் தொடர்ந்து, ஐந்தாவது நிலையான கருப்பு அல்லது ‘பிளாக்’ நிலை வருகிறது. இது முக்கிய உள்கட்டமைப்புகள், அரசின் செயல்பாடு அல்லது மனித உயிர்களுக்கு உடனடி அச்சுறுத்தலைக் குறிக்கிறது.
தேசிய சைபர் சம்பவப் பதிலளிப்பு திட்டம் முதன்முதலில் 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் புதுப்பிப்பு வரைவு 2024 டிசம்பரில் வெளியிடப்பட்டு, 2025 பிப்ரவரி 14ஆம் தேதி வரை பொதுக் கருத்துகளுக்காக திறந்திருந்தது. US Black-level cyber attack plan கீழ், சைபர் நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டாட்சி நடவடிக்கைகளை வழிநடத்தும். எஃப்.பி.ஐ. விசாரணை மற்றும் அச்சுறுத்தல் எதிர்வினையை முன்னெடுக்கும்; சிஐஎஸ்ஏ பாதிக்கப்பட்ட அமைப்புகளுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கும்.
பெரிய மின்தடை ஏற்பட்டால் குடிநீர், தகவல் தொடர்பு, போக்குவரத்து, வங்கிச் சேவைகள், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படலாம் என முன்னைய ஆய்வுகள் எச்சரித்துள்ளன. நிறுவனங்கள் அவசரநிலைப் பயிற்சிகளை நடத்தவும், பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் தானியங்கி பாதுகாப்புச் சோதனைகளில் முதலீடு செய்யவும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

































