சந்தேகமான தகவல்களைப் பகிர்வதற்கு முன் சரிபார்ப்பு
வாட்ஸ்அப்பில் உள்ள மெட்டா ஏஐ, ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி போன்ற கருவிகள் மூலம் காணொளிகள், படங்கள் மற்றும் பிற தகவல்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கலாம். சந்தேகமான தகவல்கள் அல்லது உள்ளடக்கங்களை மெட்டா ஏஐயிடம் பகிர்ந்து, அவை உண்மையானவையா எனக் கேட்கலாம். இதுபோன்ற AI tools to verify deepfakes சேவைகளைப் பயன்படுத்தி தகவல்களை மதிப்பிடலாம் என்று ஃபஹ்மி கூறினார்.
கோலாலம்பூர் உலகின் மிக ஆபத்தான 10 நகரங்களில் ஒன்றாக இருப்பதாகக் கூறிய வைரல் படம் தொடர்பாகத் தமக்கும் சந்தேகம் எழுந்ததாக அவர் தெரிவித்தார். அந்தப் படத்தை மெட்டா ஏஐயிடம் அனுப்பியபோது, அதிலுள்ள புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வ காவல்துறை ஆதாரங்களில் இருந்து பெறப்படவில்லை என்றும், அதன் மூலத் தகவல் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே, இதுபோன்ற உள்ளடக்கங்களை நம்பக்கூடாது என அவர் எச்சரித்தார்.
இதனிடையே, மைசைரன் ஆரம்ப எச்சரிக்கை அமைப்பின் நாடு தழுவிய சோதனை நவம்பர் 29ஆம் தேதி காலை 10.10 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் என ஃபஹ்மி கூறினார். அதிகாரப்பூர்வ எச்சரிக்கை ஒலியை மக்கள் அறிந்துகொள்வதும், உண்மையான அவசரநிலையில் உடனடி நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதும் சோதனையின் நோக்கமாகும். சோதனைக்காக மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஆரம்பப் பள்ளி உதவி ஜனவரி 2027 முதல் மாணவர் ஒருவருக்கு 150 ரிங்கிட்டிலிருந்து 200 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்ட தொகையில் வழங்கப்படும். இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டபடி, பள்ளிகளில் பணமாக உதவி வழங்கும் முறையும் தொடரும் என ஃபஹ்மி தெரிவித்தார்.





























