பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் ஒரு ‘எச்சரிக்கை’ பட்டியலில் அவரது பெயர் இருப்பதால் நுழைவு மறுக்கப்பட்டதாக கோஸ்டா ரிகா குடிவரவு அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது வருகை தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர். இதனை அல்பானேசே கடுமையாக மறுத்ததுடன், அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் விதித்த தடைகளுடன் இந்த முடிவு தொடர்புடையதாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் அவசர மனு
கோஸ்டா ரிகா பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சென்றிருந்த அல்பானேசேவுக்கு அந்தப் பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் வழங்க திட்டமிட்டிருந்தது. விமான நிலையத்தில் தங்கியிருந்தபடியே காணொலி மூலம் விழாவில் பங்கேற்றார்; அவருக்குப் பதிலாக அவரது உதவியாளர் விருதைப் பெற்றார்.
அவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால உத்தரவில், அவர் நாட்டில் தங்க அனுமதித்த நீதிமன்றம், நுழைவு மறுப்புக்கான காரணத்தை 24 மணிநேரத்துக்குள் விளக்குமாறு குடிவரவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கின் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை.
Francesca Albanese Costa Rica entry denied சம்பவம் குறித்து அல்பானேசே, தன்னை பயங்கரவாதத்துடன் இணைத்து கோஸ்டா ரிகா அரசு தவறான தகவலைப் பரப்பியுள்ளதாகக் கூறினார். ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டுர்க், இந்த முடிவு குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார். கோஸ்டா ரிகா மனித உரிமைகள் ஆணையமும், அவரது நிலை மற்றும் ஐ.நா. அதிகாரியாக உள்ள பாதுகாப்பை மதிப்பிடாமல் தானாகவே நுழைவு மறுக்கப்பட்டதாக விமர்சித்தது.































