மேலும் போர் நிறுத்தத்தை சீர்குலைக்க முயன்ற ஈரானிய கடும்போக்காளர்களின் நடவடிக்கைகளே அண்மையில் பதற்றம் மீண்டும் அதிகரிக்கக் காரணமாக இருந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்யும் புதிய சதித் திட்டம் தொடர்பாக இஸ்ரேலிய புலனாய்வு அமைப்புகள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும்,இதனைத் தொடர்ந்து ட்ரம்பின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னைப் படுகொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அதற்கான பதிலடி குறித்து முன்கூட்டியே தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் பதற்றம் மீண்டும் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
































