செய்திகளைத் திட்டமிடும் முறை
செய்தியைத் தட்டச்சு செய்த பிறகு, அனுப்பு பொத்தானை அழுத்திப் பிடித்து, விரும்பிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்ய வேண்டும். திட்டமிடப்பட்ட WhatsApp scheduled messages பட்டியலை பயனர்கள் பார்க்க முடியும். தேவையெனில், அவற்றை அனுப்பப்படும் நேரத்திற்கு முன்பே நீக்கவும் முடியும்.
இந்த வசதி உரைச் செய்திகளுக்கு மட்டுமல்லாமல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் பொருந்தும். செய்தியைப் பெறுபவருக்கு அது வழக்கமான செய்தியைப் போலவே தோன்றும். தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது பேட்டரி இல்லாவிட்டாலும், தேர்வு செய்யப்பட்ட நேரத்தில் செய்தி அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட செய்திகளைப் போலவே, திட்டமிடப்பட்ட செய்திகளும் end-to-end encryption மூலம் பாதுகாக்கப்படும். இந்த புதிய வசதி அடுத்த சில வாரங்களில் உலகளவில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.




























