இது Facebook, Instagram, X (முன் Twitter) போன்ற அனைத்து முக்கிய சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்.
இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்க தூதரகத்தினரின் கூற்றுப்படி, இது விசா விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் முக்கியமான கட்டமாகும்.
2019ல் அறிமுகமான சமூக ஊடகத் தகவல்களை வழங்கும் விதியை மேம்படுத்தி, இப்போது முழுமையான வெளிப்படையாக (Public) மாற்ற வேண்டும் என்பது இந்த புதிய கட்டுப்பாடு கூறுகிறது.
தகவலை மறைத்தல் அல்லது தவறாக வழங்குவது விசா மறுப்புக்கே காரணமாக அமையலாம். எனவே, மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பரிமாற்ற திட்டங்களில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளை விரைவில் “Public” என மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.































