இலங்கை விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் பரிசோதனை நடவடிக்கைகளின் போது பயணிகள் எதிர்நோக்கும் பிரதானமான பிரச்சனை சுங்க பிரிவினரின் பரிசோதனை.
இந்த பரிசோதனை நடவடிக்கையானது இலங்கை நாட்டிற்குள் வருகின்ற பயணிகள் சட்டவிரோதமான பொருட்களையோ அல்லது சட்டத்திற்கு புறம்பான வகையில் இறக்குமதி தொடர்பான சட்டங்களை மீறும் வகையில் பொருட்களை இலங்கைக்குள் எடுத்து வருபவர்கள் போன்ற பல விடயங்களை கண்டறிவதற்காக அமைவதாகும்.
அந்த வகையில் இலங்கை விமான நிலையத்தின் ஊடாக வருகின்ற ஒரு பயணி அல்லது ஒரு இலங்கையர் எடுத்து வரக்கூடிய தங்கம் எவ்வளவு ?

சாதாரணமாக நீங்கள் அணிந்து வருகின்ற தங்க ஆபரணங்களுக்கு எந்தவித இடையூறும் சுங்கத்தினரால் விளைவிக்கப்படாது அதுவும் குறிப்பிட்ட அளவுக்கு உட்பட்டதாகும்.
இதற்கு மாறாக ஆபரணங்கள் தங்கம் அல்லது வெள்ளி அல்லது பிளாட்டினம் முழுமை அடையாத நிலையில் நீங்கள் எடுத்துவரும் சந்தர்ப்பத்தில் சுங்கப் பிரிவினரால் பரிசோதிக்கப்பட்டு கண்டறியப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாக அமையும்.
பொதுவாக அனைவருக்கும் இருக்கின்ற ஒரு சந்தேகம் சாதாரணமாக அணிந்து வருகின்ற முழுமை அடைந்த இந்த தங்க ஆபரணங்கள் எவ்வளவு நாங்கள் எடுத்து வர முடியும்.
உதாரணமாக 100 கிராம் எடை கொண்ட சாதாரணமாக அணியக்கூடிய தங்க நகைகள் (சங்கிலி, தோடு, கைக்காப்பு) இதுபோன்ற 22 கரட்டுக்கு உட்பட்ட நகைகளை எந்தவித தடையுமின்றி இலங்கையர்களோ அல்லது இலங்கைக்கு வருபவர்களோ எடுத்து வர முடியும்.
இலங்கையர் ஒருவர் அல்லது இலங்கை வரும் நபர் ஒருவர் எவ்வளவு பணத்தினை இலங்கைக்குள் எடுத்து வர முடியும் ?

பொதுவாக ஒரு தனி நபர் இலங்கைக்குள் நுழையும் வேலை சுங்கத் திணைக்களத்தாரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அளவுக்கு அதிகமாக சட்டத்தை மீறி பெருந்தொகையிலான பணத்தினை வைத்திருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.
ஒரு தனிநபர் இலங்கைக்கும் நுழையும் போது சட்ட ரீதியாக USD 15,000 க்கு குறைவாக எடுத்து வர முடியும்.
இதற்கு மேல் அதிகமாக எடுத்து வரும் பட்சத்தில் சுங்கப் பரிசோதனைக்கு முன்னரே அவ்விடத்திற்கு சென்று இவ்வளவு பணம் எடுத்து வருகின்றேன் என்று சட்ட ரீதியாக அறிவித்து அதன் பின்னர் அதற்கான வரிகளை செலுத்தி அனுமதிகளை பெற்றுக் கொண்டு விமான நிலையத்தை விட்டு நீங்கள் செல்ல முடியும்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் பெருந்தொகையான பணம் உங்களிடம் இருப்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டால் உங்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் சுங்கப்பிரிவினரால் மேற்கொள்ளப்படும்.
மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளி மூலம் அறிந்து கொள்ளலாம்.


































