நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளை குறைக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) கேமரா அமைப்புகளை அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொருத்தும் முன்னோடி திட்டம் (Pilot Project) இன்று (செவ்வாய்க்கிழமை) தனியார் துறையின் பங்குபற்றுதலுடன் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக மொத்தம் 40 AI கேமராக்கள் நிறுவப்படவுள்ளன. இவை பேருந்து ஓட்டுநர்களின் செயல்பாடுகளை கண்காணித்து தேவையானபோது எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கும். ஓட்டுநரின் சோர்வு, தூக்க கலக்கம், கண் மூடுதல் போன்றவற்றை கண்டறிவதோடு போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சீட் பெல்ட் பயன்பாடு ஆகியவற்றையும் கண்காணிக்கும். மேலும், ஓட்டுநர்களுக்கு நேரடி சிக்னல்கள் வழங்கி பேருந்து படையணி மேலாண்மையிலும் உதவும்.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் கதிர்காமம் டெப்போவில் போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வில், சில நீண்ட தூர பேருந்துகளில் AI கேமராக்கள் பொருத்தப்பட்டு, அமைச்சர் டெப்போவை ஆய்வு செய்தார்.





Leave a Reply