இங்கிலாந்தைச் சேர்ந்த Aaron Rai அமெரிக்காவில் நடைபெற்ற பிஜிஏ சாம்பியன்ஷிப் கோல்ஃப் தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்து, 107 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பட்டத்தை வென்ற முதல் இங்கிலாந்து வீரராக திகழ்ந்துள்ளார். 31 வயதான ஆரோன் ராய், அரோனிமின்க் கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற இறுதி சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 5-அண்டர் 65 புள்ளிகளுடன் மொத்தமாக 9-அண்டர் 271 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இறுதிச்சுற்றில் 68 அடி தூரத்தில் அடித்த அதிரடியான ‘பேர்டி’ ஷாட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியதுடன் அவரது வெற்றியையும் உறுதி செய்தது.
Jon Rahm மற்றும் Alex Smalley ஆகியோரை மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி அவர் இந்த வெற்றியை கைப்பற்றினார். 1919ஆம் ஆண்டில் ஜிம் பார்ன்ஸ் பட்டம் வென்றதற்குப் பிறகு பிஜிஏ சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் ஆரோன் ராய் பெற்றுள்ளார். சிறுவயதில் ஃபார்முலா 1 ஓட்டுநராக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்த அவர் பின்னர் கோல்ஃபில் முழுமையாக கவனம் செலுத்தி தற்போது தனது முதல் மேஜர் பட்டத்தை வென்றுள்ளார். இந்த வெற்றி மூலம் உலக கோல்ஃப் அரங்கில் ஆரோன் ராய் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளதாக விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





Leave a Reply