நேரத்தை விட முடிவுகளுக்கு முக்கியத்துவம்
தற்போதைய ஒன்பது முதல் ஐந்து மணி நேர வேலை முறையில், பணியாளர்கள் பணியிடத்தில் செலவிடும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் பெறுகின்றனர். ஆனால், செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரே பணியை குறைந்த நேரத்தில் முடிக்க முடியும் என்பதால், நிரந்தர வேலை நேரத்துடன் இணைந்த சம்பள அமைப்பை நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்யக்கூடும் என டோர்கி தெரிவித்தார்.
ஒருவர் எட்டு மணி நேரத்தில் முடிக்கும் பணியை மற்றொருவர் AI உதவியுடன் மிகக் குறைந்த நேரத்தில் முடித்தால், நேரத்திற்காக மட்டும் ஏன் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கேள்வி எழும் என்றும் அவர் கூறினார். இதனால் AI outcome-based payments முறை வேலைகள் மற்றும் சம்பளங்கள் அமைக்கப்படும் விதத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
மேலும், குறிப்பிட்ட பணிகள் அல்லது திட்டங்களுக்காக நிபுணர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தும் gig economy வளரக்கூடும் என அவர் எதிர்பார்க்கிறார். மென்பொருள், காணொளி, செயலி போன்ற தயாரிப்புகளை உருவாக்குவதற்காக தனித்தனி நிபுணர்களை பயன்படுத்தும் நடைமுறை அதிகரிக்கலாம்.
AI bias evaluators, AI ethicists, மனிதப் பயிற்சியாளர்கள் மற்றும் AI மாதிரி திறன் மதிப்பீட்டாளர்கள் போன்ற புதிய பணியிடங்கள் உருவாகலாம் என்றும் டோர்கி கூறினார். அதே நேரத்தில், விநியோகம், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு, தனிப்பட்ட உதவியாளர் சேவைகள் போன்ற வசதி சார்ந்த பணிகளுக்கான தேவையும் அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்தார்.






























