இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து இதுவரை எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்து 105 நாள்கள் கடந்துள்ள நிலையில், அந்தக் கூட்டத்தொடரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்னும் முறையாக முடிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து கவனம்
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில், 2023 மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும், தொகுதி மறுவரையறைக்கு வழிவகுப்பதற்குமான ‘2026 அரசியலமைப்பு (131வது திருத்த) மசோதா’ மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்த அவையிலும் அந்த அளவிலான உறுப்பினர் பலம் இல்லாததால், எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்கான ஆதரவைப் பெறும் முயற்சியின் காரணமாகவே மழைக்காலக் கூட்டத்தொடர் முறையாக முடிக்கப்படாமல் இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
புதிய கூட்டத்தொடரைக் கூட்ட குறைந்தபட்சம் 14 நாள்கள் முன்னறிவிப்பு அவசியமாகும். கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியே குளிர்காலக் கூட்டத்தொடருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் India Parliament special session குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.































