1,000 முதல் 1,500 பேருக்கு தற்காலிக பாதுகாப்பு
சில குடும்பங்களில் பெற்றோர் அல்லது பிற உறுப்பினர்களுக்கு ஸ்வீடனில் தங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், 18 வயதை கடந்த அவர்களது பிள்ளைகள் நாடுகடத்தலை எதிர்கொண்ட வழக்குகள் குறித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குடியேற்ற நிறுவனத்தின் தலைவி மரியா மிந்த்ஹாமர், இதை “விதிவிலக்கான” நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 1,000 முதல் 1,500 பேர் பயன்பெறலாம் என அவர் கூறியுள்ளார்.
நீண்ட காலமாக ஸ்வீடனில் வசித்து, கல்வி கற்று, சமூகத்தில் இணைந்திருந்த இளைஞர்களின் குடியிருப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவங்கள் ஊடகங்களாலும் மனித உரிமை அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டன. தற்போதைய சட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக ஸ்வீடன் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இளம் புலம்பெயர்ந்தோருக்கு கூடுதல் சட்டப் பாதுகாப்பு வழங்கும் புதிய சட்டம் 2027ஆம் ஆண்டு இலையுதிர் காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை Sweden deportation of young migrants நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும்.

































