வசுந்தரா பகுதியில் டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் சுஷில் குமாருக்கு தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும், மீண்டும் அதே பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது மகன் மற்றும் மருமகனுக்கும் இதேபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.
இரத்தப் பரிசோதனையில் ஈயம் கண்டுபிடிப்பு
மருத்துவப் பரிசோதனையில் சுஷில் குமாரின் உடலில் ஆபத்தான அளவு ஈயம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உணவில் திட்டமிட்டு விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகித்தார். அவரது 12 வயது மகள், ரேணு உணவின் ஒரு பகுதியை தனியாக எடுத்துவைத்த பின்னர் மீதமுள்ள உணவில் ஏதோ ஒன்றைத் தெளித்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கடந்த செப்டம்பர் மாதம் இந்திராபுரம் காவல் நிலையத்தில் சுஷில் குமார் புகார் அளித்தார். விசாரணைக்குப் பிறகு டெல்லி விவேக் விஹாரில் பதுங்கியிருந்த ரேணுவை போலீஸார் கைது செய்தனர். இந்த Ghaziabad poisoning case விசாரணையில், பண ஆசையால் உணவில் ஈயம் கலந்ததாக ரேணு ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரி அபய் ராஜேந்திர தாகா தெரிவித்தார்.
சுஷிலின் ரூ.6 கோடி மதிப்பிலான டிராவல் ஏஜென்சி நிறுவனத்தையும், ரூ.2 கோடி ஆயுள் காப்பீட்டுத் தொகையையும் பெற இந்தத் திட்டம் தீட்டப்பட்டதாக போலீஸார் கூறினர். கொலை முயற்சி மற்றும் விஷம் கொடுத்து காயப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேணுவின் தாய், சகோதரர் மற்றும் மைத்துனரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.































