அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 638, அதே நிறுவனத்தின் விமானம் 2152-ன் இறக்கையை உரசியதாக அதிகாரிகள் கூறினர். இரு விமானங்களும் போயிங் 737-800 ரகத்தைச் சேர்ந்தவை. அவற்றின் இறக்கை முனைகள் தொடர்பு கொண்டதாக விமான நிறுவனம் தெரிவித்தது.
விமானங்கள் சேவையிலிருந்து நீக்கம்
சம்பவத்துக்குப் பிறகு இரு விமானங்களும் மீண்டும் வாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பராமரிப்புக் குழுக்களின் சோதனைக்காக சேவையிலிருந்து நீக்கப்பட்டன. விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் அவசர உதவியையும் தீயணைப்பு பணியாளர்களையும் விமானங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெளியேற்றப்பட்ட இரு விமானங்களின் பயணிகளை அவர்களது இறுதி இலக்குகளுக்கு விரைவாக அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. American Airlines wing collision குறித்து கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்த உள்ளது.
2025 ஜனவரியில் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் 67 பேர் உயிரிழந்த அதே விமான நிலையத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.































