ஆன்லைன் நிதி மோசடிகள், போலி முதலீட்டு திட்டங்கள், சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் ஆகியவை இந்த பாரிய இழப்புக்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. இதனால் நாட்டின் நிதி பாதுகாப்பு மற்றும் வங்கி அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்புகளையும் அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க வங்கிகளின் கண்காணிப்பு முறைகள் மேலும் வலுப்படுத்தப்படவுள்ளதுடன் பொதுமக்களும் சந்தேகத்திற்கிடமான நிதி பரிவர்த்தனைகளில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





























