இந்த பார்சிலோனா வெற்றி மூலம் இரண்டாம் இடத்தில் உள்ள ரியல் மாட்ரிடை விட 14 புள்ளிகள் முன்னிலையில் சென்று இன்னும் மூன்று போட்டிகள் மீதமிருக்கும்போதே பட்டத்தை உறுதி செய்தது.
போட்டிக்கு முன் ரியல் மாட்ரிட் அணியில் குழப்பநிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. வீரர் பெடே வால்வெர்டே பயிற்சியின் போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்ததால் போட்டியில் பங்கேற்கவில்லை. இதேவேளை பார்சிலோனா பயிற்சியாளர் Hansi Flick அவர்களின் தந்தை மரணமடைந்த செய்தி வந்தபோதும் அவர் அணியை நேரடியாக வழிநடத்தினார்.
மீண்டும் திறக்கப்பட்ட கேம்ப் நௌ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை சுமார் 62,000 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். இளம் நட்சத்திரமான லமின் யமால் காயம் காரணமாக இல்லாத நிலையில் Marcus Rashford ஆரம்ப அணியில் இடம்பிடித்து முக்கிய கோலை பதிவு செய்தார். ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு லா லிகா பட்டத்தை தொடர்ச்சியாக வென்ற பார்சிலோனா அணியை உற்சாகமாக வரவேற்றனர்.




























