ஆரம்பகட்ட விசாரணைகளின் படி சந்தேகநபர் முதலில் காத்தான்குடியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்திற்குச் சென்று வாகனத்தை வாங்குவதாகக் கூறி சோதனை ஓட்டத்திற்காக எடுத்துச் சென்று தப்பியுள்ளார்.
பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை அடகாகக் கொடுப்பது போல் பயன்படுத்தி Ikman.lk இணையதளத்தில் விற்பனைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு மோட்டார் சைக்கிளை வாங்குவதாகக் கூறி உரிமையாளரை மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் சந்திக்க அழைத்துள்ளார்.
அங்கு தனது வசமிருந்த திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை தற்காலிகமாக ஒப்படைத்து, மற்றைய மோட்டார் சைக்கிளை ஓடிப்பார்ப்பதாகக் கூறி மீண்டும் தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை வாகரை பகுதியில் விற்பனை செய்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதே நபர் 2023 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற முறையில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டிருந்ததுடன் கடந்த காலங்களில் எட்டு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட பழைய குற்றவாளி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.































