தொடர்பு கிடைக்காததால் நவம்பர் 3-ம் தேதி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், காணாமல் போனவர்களின் செல்போன் கோபுரத் தகவல்கள் ராஜாஜி நகரில் வசிக்கும் சுனிதாவின் கணவர் இந்துசேகரின் வீட்டைச் சுட்டிக்காட்டின. சிசிடிவி காட்சிகளும் அவர்கள் அந்த வீட்டுக்குள் சென்ற பின்னர் வெளியே வரவில்லை என்பதை காட்டின.
குடும்பத் தகராறில் தொடங்கிய கொலைகள்
காவல்துறையினரின் கூற்றுப்படி, அக்டோபர் 16-ம் தேதி ஏற்பட்ட தகராறில் இந்துசேகர் அம்மிக்கல்லால் சுனிதாவைத் தாக்கிக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் சுனிதாவின் தாயார் ரூபாவதியையும் கொன்று, இருவரது உடல்களையும் ஏற்காட்டில் உள்ள பள்ளத்தில் வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுனிதாவின் சகோதரர்கள் சங்கர், சிவகுமார், அவர்களது மனைவிகள் நளினி, திவ்யா மற்றும் சிவகுமாரின் 7 வயது மகன் புனீத் ஆகியோரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்கள் ஏற்காடு, சாமுண்டி மலை, சிராடி மலை, நந்தி மலை பகுதிகளில் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்துசேகர் முன்கூட்டியே திட்டமிட்டு, அக்டோபர் 16 முதல் 31-ம் தேதிக்குள் கொலைகளைச் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Bengaluru family murder case விசாரணையில் ஏழு உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அம்மிக்கல் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் தடயவியல் ஆதாரங்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. தனி விரைவு நீதிமன்றம் அமைக்கவும், சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கவும் காவல்துறை பரிந்துரைத்துள்ளது. இந்துசேகரின் 17 வயது மகளுக்கு தொடர்பு உள்ளதா என்பதும் விசாரிக்கப்படுகிறது.
































