கடந்த ஜூலை 29ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒருவர் அந்தப் பெண்ணை செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். தான் ஒரு தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றும், ரூ.5 லட்சம் கடன் வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். இதை நம்பிய பெண், கேட்கப்பட்ட ஆவணங்களை அனுப்பியுள்ளார்.
கட்டணங்கள் என்ற பெயரில் பணம் வசூல்
அதன்பிறகு, கடன் தொகையைப் பெறுவதற்குப் பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என மர்ம நபர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு அந்தப் பெண் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.8,31,367 அனுப்பியுள்ளார். கடன் வழங்காமல் தொடர்ந்து பணம் கேட்கப்பட்டதால், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
இதையடுத்து, அந்தப் பெண் ஆன்லைன் மூலம் திருச்சி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை ஏமாற்றிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.5 லட்சம் கடனுக்காக ரூ.8 லட்சத்துக்கும் மேல் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Trichy online loan scam தொடர்பாக மோசடி செய்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

































