சோதனை குறித்து நடிகரின் குற்றச்சாட்டு
கடந்த தீபாவளியன்று, தனது வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் சுமார் 15 போலீஸார் சோதனை நடத்தியதாக பாலாஜி முருகதாஸ் கூறியுள்ளார். தேடுதல் வாரன்ட் இல்லாமல் போலீஸார் வீட்டுக்குள் நுழைந்ததாகவும், புகார் அளித்தவர் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சோதனையில் போதைப்பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், இந்தச் சம்பவத்தால் தமக்கு அவப்பெயர் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் பெண், தனது அண்டை வீட்டில் வசிப்பவர் என்றும், குடும்பப் பிரச்சினை காரணமாக அவருக்கு உதவி வந்ததாகவும் பாலாஜி கூறியுள்ளார்.
அந்தப் பெண்ணை அவரது குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றபோது, வீட்டில் அடைத்து வைத்து தாக்குவதாகத் தகவல் வந்ததால் அவசர எண் 100-க்கு புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலடியாகத் தன் மீது பொய்ப் புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், போதைப்பொருள் புகார் முதல் போக்சோ வழக்கு வரையிலான குற்றச்சாட்டுகள் மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தானும் புகார் அளித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பெண்ணைக் கண்டுபிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Balaji Murugadoss drug raid தொடர்பாக, போதைப்பொருள் சோதனையில் குற்றத்துக்கான எந்தப் பொருளும் கிடைக்காததால் நடிகர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என காவல் ஆணையர் கூறினார். பெண் அளித்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்தும் விசாரணை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.































