முதல் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ உருவான விதம்
கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ தொடரின் இணை உருவாக்குநரான டேவ் ஜோன்ஸ் மற்றும் அதன் ஆரம்பகால எழுத்தாளர், விளம்பரப் பொறுப்பாளர் பிரையன் பேக்லோ ஆகியோர் ஸ்காட்லாந்தின் டண்டீ நகரில் இந்த தகவலை பகிர்ந்துகொண்டனர். புதிய கேமைப் பார்க்க அனைவரும் காத்திருப்பதாக ஜோன்ஸ் கூறினார். பேக்லோ, கேமை முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
முதல் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ, 1997ஆம் ஆண்டு டண்டீயில் உள்ள DMA Design நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. காரில் இருந்து இறங்கி நடப்பது, வாகனங்களை மாற்றுவது மற்றும் திருடுவது போன்ற அம்சங்கள் அப்போது புதிய அணுகுமுறையாக இருந்தன. ஆரம்பத்தில் குற்றவாளி மற்றும் காவல்துறை அதிகாரி என இரு வகை கதாபாத்திரங்களைப் பரிசீலித்தாலும், குற்றவாளியாக விளையாடுவதே சுவாரஸ்யமானது என உருவாக்குநர்கள் முடிவு செய்தனர்.
தொடரின் முந்தைய விளையாட்டுகள் அமெரிக்க நகரங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அதன் நகைச்சுவை மற்றும் சமூக விமர்சனத்தில் ஸ்காட்லாந்தின் தாக்கம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. போலியான நிறுவனப் பெயர்கள், வானொலி நிலையங்கள் மற்றும் பாடல்கள், விளையாட்டு உலகத்தை முழுமையானதாக உணரச் செய்தன.
2013ஆம் ஆண்டு வெளியான GTA V, மூன்று நாட்களில் ஒரு பில்லியன் டொலர் வருவாய் ஈட்டியது. தற்போது உருவாகி வரும் GTA 6, பிளேஸ்டேஷன் மற்றும் எக்ஸ்பாக்ஸ் தளங்களில் அதிக முன்பதிவு செய்யப்பட்ட கேமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கோப்பு அளவு 212 ஜிபி என கூறப்படுகிறது. GTA 6 creators கூட இன்னும் கேமை விளையாடாத நிலையில், அதன் வெளியீட்டைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
































