2002ஆம் ஆண்டு பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரைக் கொலை செய்த வழக்கில் 11 பேர் தண்டனை பெற்றிருந்தனர். இவர்களில் இருவரின் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வராலே அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
நீதியை எதிர்த்து மீண்டும் போராடுவேன்: பில்கிஸ் பானு
இந்த உத்தரவு குறித்து பில்கிஸ் பானு வெளியிட்ட அறிக்கையில், தன்னை அழைக்காமலும் தனது தரப்பு வாதத்தைக் கேட்காமலும் மீண்டும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை நம்ப முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அறையில் தனது குரல் ஒலிப்பதை உறுதி செய்யாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
24 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடி வருவதாகக் கூறிய அவர், பழைய பயங்கள் மீண்டும் தலைதூக்குவதாகவும், தனது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்காக மீண்டும் அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார். நீதியின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடுமோ என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
Bilkis Bano bail case உத்தரவை எதிர்த்து போராடப் போவதாகவும், தனது குழந்தைகள், உயிரிழந்த மூன்று வயது மகள் சலேஹாவின் நினைவு மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்காக இந்தப் போராட்டத்தைத் தொடர்வதாகவும் பில்கிஸ் பானு கூறியுள்ளார்.


































