முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக தகவல்
திருச்சி மாவட்டம், போதாவூரைச் சேர்ந்த பாண்டியன் (46) விவசாயி. அதே ஊரைச் சேர்ந்த இன்பராஜ் (22) என்பவருக்கும் பாண்டியனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாண்டியன் போதாவூரில் இருந்து இனாம்புலியூரில் உள்ள தோட்டத்துக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, இன்பராஜ் 10-க்கும் மேற்பட்ட கூட்டாளிகளுடன் சேர்ந்து பாண்டியனை வெட்டிக் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த Trichy farmer murder வழக்கில், இன்பராஜுடன் கருணேஷ், செல்வேந்திரன், பிரதீஷ், மணிகண்டன், கவுதம், ஈஸ்வர், வசந்தகுமார், வினோத்குமார், ஆகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சோமராம்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் இரு சிறார்கள் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


































