29 வயதான சொர்ஜியோவன்னி, தாரா மோரிசனை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். 2024ஆம் ஆண்டு, பஸ்சல்டனில் அவர் தனது காதலி Hannah Louise Glover உடன் வசித்த வீட்டில், அலமாரிக்குள் தாராவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
நடுவர் குழு தீர்ப்பை எட்டவில்லை
இந்த வழக்கில் நடுவர் குழு திங்கட்கிழமை முதல் ஆலோசனை நடத்தி வந்தது. பல நாட்கள் ஆலோசித்த பின்னரும் கொலைக் குற்றச்சாட்டில் ஒருமித்த முடிவுக்கு வர முடியாததால், குழு கலைக்கப்பட்டது. இதனால் Busselton murder retrial நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
வழக்கின் நடுப்பகுதியில் Hannah Louise Glover கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். முன்னாள் காதலியான தாராவை பலமுறை கத்தியால் குத்தியதாகவும், சொர்ஜியோவன்னி தாராவைப் பிடித்திருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சொர்ஜியோவன்னியே இறுதியாக கத்தியால் குத்தியதாகவும் அவர் கூறினார்.
ஆனால், சொர்ஜியோவன்னியின் வழக்கறிஞர் Lisa Boston, சம்பவ நேரத்தில் அவர் போதைப்பொருள் தாக்கத்தில் இருந்ததாகவும், கோவர் தாராவைத் தாக்கியபோது அவர் விழித்ததாகவும் வாதிட்டார். சொர்ஜியோவன்னி மீதான மறுவிசாரணைக்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. கோவருக்கு எப்போது தண்டனை வழங்கப்படும் என்பதும் தெரியவில்லை.































