கனடாவின் Lena Metlege Diab தலைமையிலான குடியேற்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் 2026 ஆம் ஆண்டுக்கான Spring Economic Update திட்டத்தின் கீழ் புதிய வீட்டு வசதி முதலீடுகளை முன்னிறுத்தியுள்ளது.
குறிப்பாக நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் அதிக வீடுகள் கட்டுவதற்காக திறமையான தொழிலாளர் பணியாளர்களை அதிகரித்தல் கட்டுமான செயல்முறைகளை விரைவுபடுத்தல் மற்றும் நவீன கட்டுமான முறைகளை ஆதரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை முன்னிட்டு அமைச்சர் லீனா டியாப் மே 11 ஆம் தேதி Dartmouth பகுதியில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.
“Canada Strong For All” என்ற பொருளாதார திட்டத்தின் மூலம் கனடாவில் வீட்டு வசதி நெருக்கடியை குறைத்து புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.
மேலும் 2030-31க்குள் 80,000 முதல் 100,000 வரை புதிய திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் திட்டமும் இதில் இடம்பெற்றுள்ளது.

































