Category: Australia News
சிரியாவில் இருந்து திரும்பிய ஆஸ்திரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டு. சிரியாவில் உள்ள அகதி முகாம்களில் பல ஆண்டுகள் தங்கியிருந்த ISIS தொடர்புடைய ஆஸ்திரேலிய பெண்கள் மற்றும் குழந்தைகள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மூன்று பெண்கள் மீது தீவிரவாதம் மற்றும் அடிமைத்தன குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய அதிகாரிகளின் தகவலின்படி 53 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்கள் மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக பெண்களை அடிமையாக வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். மேலும் மற்றொரு 32 […]
ஆஸ்திரேலியாவின் நார்தர்ன் டெரிட்டரியில் உள்ள அலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் காணாமல் போன 5 வயது அபோரிஜினல் சிறுமி “குமாஞ்ஜயி லிட்டில் பேபி” மரணத்திற்கு தொடர்பாக 47 வயதான ஜெஃபர்சன் லூயிஸ் மீது போலீசார் கொலை குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். இந்தச் சிறுமி ஏப்ரல் 25ஆம் தேதி தனது குடியிருப்பு முகாமில் இருந்து காணாமல் போனதையடுத்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து நடத்திய விரிவான தேடுதலின் பின் ஐந்து நாட்களுக்கு பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சந்தேக […]
ஆஸ்திரேலியா குடியேற்றக் கொள்கையும் – தற்காலிக குடியிருப்பாளர்களின் நிலையும். ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் தற்காலிக குடியேற்ற மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தெளிவான இலக்குகளை அமைக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். சமீபத்திய அறிக்கையின் படி கடந்த 15 ஆண்டுகளில் தற்காலிக குடியேற்றர்கள் மொத்த மக்கள்தொகையில் 2.7% இலிருந்து 6% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த வேகமான உயர்வு வீடமைப்பு பொதுச் சேவைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்ட […]
சிட்னியின் பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல தகவல்களைக் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அதற்கமைய, இத்தாக்குதல்களுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் சிட்னி நகரின் தென்மேற்குப் பகுதியில் வசித்து வந்த நவீட் அக்ரம் (Naveed Akram) என்பவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், அவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரா அல்லது தற்போது கைது செய்யப்பட்டுள்ளவரா? என்பது குறித்துக் குறிப்பிடப்படவில்லை. குறித்த துப்பாக்கிச் சூடு யூதர்களின் கொண்டாட்ட […]
அஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரையில் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளனர். ஆஸ்திரேலியாவை உலுக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
சிட்னியின் உலகப் புகழ்பெற்ற போண்டி கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு பேரை ஆஸ்திரேலிய போலீசார் காவலில் எடுத்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உடனடியாக போலீசார் மற்றும் அவசர சேவைகள் குவிக்கப்பட்டன. நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை பொதுமக்கள் அந்தப் பகுதியை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் பாதுகாப்பான […]
ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற “ஆஸ்திரேலியாவுக்காக பேரணி” (March for Australia) என்ற பெயரில் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். குடியேற்றத்தை கட்டுப்படுத்தி ஆஸ்திரேலியாவின் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பை பாதுகாப்பது என்ற நோக்கத்துடன் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. பொதுவாக குடியேற்றத்தின் அதிகரிப்பு, வீட்டு விலை உயர்வு, மருத்துவ சேவைகளின் சிரமம் போன்ற பிரச்சினைகள் குறித்து கவலைப்பட்டு, மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்களில் பங்கேற்றவர்கள் குறிப்பாக இந்திய வம்சாவளியினரின் […]