தென் ஆப்பிரிக்காவில் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொழிலதிபரைத் தேடும் நடவடிக்கையின் போது முதலைகள் அதிகமாக உள்ள நதியில் இருந்து மனித உடல் பாகங்களை போலீசார் மீட்டுள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கையின் போது ஒரு போலீஸ் அதிகாரி ஹெலிகாப்டரில் இருந்து கயிற்றின் உதவியுடன் நதிக்குள் இறக்கப்பட்டு மிக அபாயகரமான சூழ்நிலையில் செயல்பட்டார்.

காணாமல் போன நபரை விழுங்கிய முதலை ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தாலும் அதனை அணுகுவது மிகவும் பதற்றமூட்டும் அனுபவமாக இருந்ததாக அதிகாரி தெரிவித்தார். பின்னர் சுமார் 4.5 மீட்டர் நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட அந்த முதலை ஹெலிகாப்டரின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அதன் உடலின் உள்ளிருந்து மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த உடல் பாகங்கள் காணாமல் போன நபருடையதா என்பதை உறுதிப்படுத்த DNA பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முதலை வயிற்றில் பல்வேறு வகையான காலணிகளும் கண்டுபிடிக்கப்பட்டது இது மற்ற சம்பவங்களுடனும் தொடர்பு இருக்கக்கூடும் என சந்தேகம் எழுப்பியுள்ளது. இந்த ஆபத்தான மற்றும் சிக்கலான நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றிய போலீஸ் அதிகாரிக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading