வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், மடுகந்த பகுதியில் ரகசிய விசேட சோதனை நடவடிக்கையின் போது குற்றநபரை அடையாளம் காணியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மடுகந்த பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் எனவும், வளர்க்கப்பட்ட கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























