பிரீத் விகார் பகுதியில் உள்ள சல்டனேட் கேஃபேவில் இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கேபேயில் பணிபுரியும் நண்பர்களுடன் அந்த இளம்பெண் சென்றிருந்தார். மொத்தம் 8 பேர் பங்கேற்றிருந்த அந்தக் கூட்டத்தில் அனைவரும் மது அருந்தியுள்ளனர்.
பார்ட்டி தொடர்பாக போலீஸ் விசாரணை
கேபே இரவு 11.30 மணிக்கு மூடப்பட்ட பிறகு, அது மீண்டும் திறக்கப்பட்டு தொடர்ந்து மது அருந்தி நடனமாடியதாக கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில், அவருடன் நடனமாடிய இருவர் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலுக்கு பார்ட்டியில் இருந்த இரண்டு பெண்கள் உட்பட சிலர் உதவியதாகவும், உற்சாகப்படுத்தியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் அனைவரும் அங்கிருந்து சென்றனர். காலை 5.30 மணிக்கு, இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் மீது இளம்பெண் போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், Delhi cafe gang rape case தொடர்பாக மூவரைக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அவருடன் பணிபுரிபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






























