வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில், அந்த மாணவன் நண்பர்களிடம் துப்பாக்கியைக் காட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூன்று முறை குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு வகுப்பறைத் தரையில் பாய்ந்தது. இரண்டாவது குண்டு அருகிலிருந்த மாணவனின் உடலை உரசியபடி சென்றது. மூன்றாவது குண்டு முஹம்மது ஷெபீக்கின் உடலில் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள், மாணவனிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணை தீவிரம்
தோள்பட்டைக்கும் கைக்கும் இடையே குண்டு பாய்ந்த முஹம்மது ஷெபீக், கோட்டக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது மாணவர்களுக்கு இடையே வாக்குவாதமோ, மோதலோ நடைபெறவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்த Kerala school shooting குறித்து துப்பாக்கியைக் கொண்டு வந்த மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதம் எங்கிருந்து கிடைத்தது, பள்ளிக்கு கொண்டு வந்ததன் நோக்கம் என்ன, இதற்கு முன்பும் பள்ளிக்குக் கொண்டு வரப்பட்டதா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது. ஷொர்ணூர் டி.எஸ்.பி. வினு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். துப்பாக்கியில் எத்தனை தோட்டாக்கள் இருந்தன என்பது விரிவான ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என டி.எஸ்.பி. தெரிவித்துள்ளார். கேரள கல்வி அமைச்சர் அவசர அறிக்கை கோரியுள்ளார்.
இதற்கிடையே, துபாயிலிருந்து நேற்று கொச்சி நெடும்பாசேரி சர்வதேச விமான நிலையம் வந்த இரு பயணிகளின் உடைமைகளில் இருந்து 11 ஏர் ரைபிள் துப்பாக்கிகளைச் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பாலக்காட்டைச் சேர்ந்த ரமேஷ் மச்சாட், சிஜோய் சசி ஆகியோரிடமிருந்து பல்வேறு மாடல்களைக் கொண்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்பிக்க அவற்றின் பாகங்கள் தனித்தனியாகக் கழற்றி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவற்றை சட்டவிரோதமாகக் கடத்த முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் சதித் திட்டங்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிகளுக்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.






























