பார்ட்டிக்குப் பிறகு காவல்துறை நடவடிக்கை
கேபேவில் பணிபுரியும் 22 வயது இளம் பெண், தன்னுடன் பணிபுரியும் நண்பருடன் அங்கு சென்றார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டியில் மொத்தம் எட்டு பேர் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அதே கேபேவில் பணிபுரிபவர்கள் என கூறப்படுகிறது.
அனைவரும் மது அருந்திய நிலையில், இரவு 11.30 மணிக்கு கேபே மூடப்பட்ட பிறகும் அதை மீண்டும் திறந்து தொடர்ந்து மது அருந்தி நடனமாடியுள்ளனர். அதிகாலை நேரத்தில், அந்தப் பெண்ணுடன் நடனமாடிய இருவர் அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலுக்கு பார்ட்டியில் இருந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட சிலர் உதவியதாகவும் உற்சாகப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 3.30 மணியளவில் அனைவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். காலை 5.30 மணிக்கு அந்தப் பெண் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறை, Delhi cafe gang rape தொடர்பாக இரு பெண்கள் உட்பட மூவரைக் கைது செய்துள்ளது. தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது.
































