சிறப்பு வாக்காளர் திருத்தத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, காக்ரோச் ஜனதா கட்சியும் ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஜந்தர் மந்தர் பகுதியில் பலத்த பாதுகாப்பு
அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விமானத்திற்குள் கைது செய்யப்பட்ட காணொலி சமூக ஊடகங்களில் பரவியது. இந்த நடவடிக்கை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும், மூன்று தலைவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜெர்மனியில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க வந்த யூடியூப்பர் துருவ் ரதியும் குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய டெல்லியில் இருந்து 50 போலீஸார் சென்றதாக கூறப்படுகிறது.
போராட்டத்தை முன்னிட்டு புது டெல்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு செல்லும் 75 நீண்டதூர ரயில்களும், 179 உள்ளூர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜந்தர் மந்தர் செல்லும் 30 சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 20,000 பேர் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 30,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். Delhi Jantar Mantar protest காரணமாக மெட்ரோ சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
































