டென்மார்க் குடியேற்றம், சேவை அழைப்பு நேரங்களில் மாற்றம்.

டென்மார்க் குடியேற்ற சேவை (Danish Immigration Service) தனது தொலைபேசி சேவை நேரங்களில் மாற்றம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய மாற்றத்தின் படி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே சேவை வழங்கப்படும்.

புதன்கிழமை முழுவதும் தொலைபேசி சேவை மூடப்பட்டிருக்கும். வியாழக்கிழமை மட்டும் பிற்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சேவை வழங்கப்படும். மேலும் வெள்ளிக்கிழமையிலும் தொலைபேசி சேவை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் காரணமாக குடியேற்றம் விசா, குடும்ப இணைப்பு உள்ளிட்ட கேள்விகளுக்காக தொடர்பு கொள்ள விரும்பும் வெளிநாட்டு நபர்கள் தங்கள் அழைப்புகளை மேற்கண்ட நேரங்களுக்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் அதிகமான காத்திருப்பு நேரம் இருக்கக்கூடும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading