மருத்துவக் கருவி பறிமுதல்
மேக்கலாம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக ஸ்கேன் மையம் செயல்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று மதியம் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
மருத்துவக் குழுவினர் வந்ததைப் பார்த்ததும் கர்ப்பிணிகளுக்கு கருவின் பாலினத்தை தெரிவித்ததாக கூறப்படும் நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். வீட்டுக்குள் கருவின் பாலினம் கண்டறியும் கருவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், பாலினம் கண்டறிந்து தெரிவிக்க ஒருவரிடம் 17 ஆயிரம் ரூபாய் வசூலித்ததாகவும், கர்ப்பிணிகளை வீடு தேடிச் சென்று அழைத்து வர ஏஜெண்டுகள் செயல்பட்டதாகவும் தெரியவந்தது. பெண் குழந்தை வேண்டாம் என நினைப்பவர்களுக்கு கருக்கலைப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த Dharmapuri illegal scan centre-ஐ நடத்தியதாக அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு, பென்னாகரம் அருகே ரங்காபுரத்தைச் சேர்ந்த செவிலியர் பரிமளா ஆகியோரை பாலக்கோடு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பரிமளா மீது இதேபோன்ற இரண்டு வழக்குகள் ஏற்கனவே உள்ளதாக கூறப்படுகிறது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சட்டவிரோத ஸ்கேன் மையங்கள் மூலம் கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





























