கொச்சி அருகே மூவர் சம்பவ இடத்திலேயே பலி
கொச்சி நெடும்பாசேரி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள சுவர்ணோத்யானம் உயிரியல் பூங்கா பகுதியில் இந்த விபத்து நடந்தது. சுஹைல் ஓட்டிய மினி கூப்பர் கார், ஒரே ஸ்கூட்டரில் சென்ற தேவிகா (21), கோபிகா (22), இய்யாஸ் (21) ஆகியோர் மீது பின்னால் இருந்து அதிவேகமாக மோதியது. மோதலில் மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்துக்குப் பிறகு கார், ஸ்கூட்டரை 100 மீட்டருக்கும் அதிகமாக இழுத்துச் சென்று சாலையோர கான்கிரீட் தடுப்பில் மோதி நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவிகா வயநாடு கல்பெற்றாவையும், கோபிகா பாலக்காடு மன்னார்க்காட்டையும், இய்யாஸ் கர்நாடகாவின் கூர்க் பகுதியையும் சேர்ந்தவர்கள். அவர்கள் பணியை முடித்துவிட்டு உணவருந்திய பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மூன்று மதுபான பார்கள் மீது நடவடிக்கை
சுஹைல் மற்றும் காரில் இருந்த அவரது நண்பர் நினவ் (22) ஆகியோரை நெடும்பாசேரி காவல்துறையினர் கைது செய்தனர். ஜோயல், அமீன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெறுகிறது. Kerala drunk driving crash வழக்கில், சுஹைல் பயணிக்கும் வழியில் மூன்று பார்களில் மது அருந்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மது வாங்கவும் அருந்தவும் குறைந்தபட்ச வயது 23 ஆகும். இதை மீறி 19 வயது இளைஞருக்கு மது வழங்கியதாகக் கூறப்படும் மூன்று பார்களின் உரிமங்களை ரத்து செய்து, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.





























