இந்த விழாவை நடத்திய நிறுவனத்துடன் தொடர்புடைய டி.சி. இளங்கோவன், தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகியாக உள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம், கட்டட அனுமதி உள்ளிட்ட விவகாரங்களுக்காக ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து லஞ்சம் வழங்கியதாக அவர் காவல்துறையில் புகார் அளித்ததாக மாவட்ட திமுகவினர் தெரிவிக்கின்றனர். அந்தப் புகாரைத் தொடர்ந்து பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டதாகவும், முத்துகுமார் பின்னர் சரணடைந்ததாகவும் அவர்கள் கூறினர்.
எம்.பி. ஆ.மணியின் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து திமுக நிர்வாகிகள், கட்சிக்கு எதிராக புகார் அளித்தவரின் நிறுவன விழாவில் எம்.பி. பங்கேற்றது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குற்றம்சாட்டினர். மேலும், ஆ.மணி மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Dharmapuri MP petrol bunk event குறித்து விளக்கம் அளித்த ஆ.மணி, இந்தியன் ஆயில் கார்பரேஷன் அழைப்பின் பேரிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் விழாவில் பங்கேற்றதாக தெரிவித்தார். இதை ஏன் பெரிதுபடுத்துகின்றனர் என்பது தெரியவில்லை என்றும், தனக்கு இதைவிட முக்கியமான பணிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.






























