பின்னர் ஸ்பெயின் வீரர்கள் உலகக் கோப்பையை உயர்த்திப் பிடித்து வெற்றியைக் கொண்டாடிய தருணத்திலும் அவர் மேடையில் தொடர்ந்திருந்ததாக சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. மேலும், ஸ்பெயின் அணித் தலைவர் ரோட்ரி ட்ரம்பை சற்றுப் பின்வாங்குமாறு சைகை செய்வது போன்ற காட்சிகளும் வெளியாகியதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை FIFA தலைவர் ஜியான்னி இன்பான்டினோ ட்ரம்பிடம் சென்று அவரை மேடையிலிருந்து அழைத்துச் செல்ல முயற்சிப்பது போன்ற காட்சிகளும் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில் ட்ரம்பின் நடத்தை குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஆதரவு கருத்துகள் மற்றும் மாறுபட்ட விளக்கங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.































