சம்பவ இடத்தில் நான்கு இளைஞர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இதேவேளை போலீசாரும் தம்மை தாக்கியதாக இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.சோதனையின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி சிலர் போலீஸ் அதிகாரிகளை அச்சுறுத்தி பின்னர் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு இளைஞர் போலீஸ் அதிகாரியின் பணப்பையில் ஐஸ் வகை மெத்தாம்பெட்டமின் இருந்ததாக குற்றம் சாட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.சம்பவத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் காயமடைந்த நான்கு போலீசாரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.




























