இந்த வசந்த காலத்தில 4.5 மில்லியன் குடும்பங்கள் தங்களின் எரிசக்தி வவுச்சரை தானாகவே பெற உள்ளனர். இதுவரை அடையாளம் காணப்படாதவர்கள் ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31, 2026 வரை ஆன்லைனில் அல்லது அஞ்சல் வழியாக தங்களின் வவுச்சரைப் பெற விண்ணப்பிக்கலாம். எரிசக்தி வவுச்சர் என்பது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டு எரிசக்தி கட்டணத்தின் ஒரு பகுதியை அரசு உதவியாக வழங்கும் திட்டமாகும்.
இந்த ஆண்டு பிரான்ஸ் 4.5 மில்லியன் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு ஏப்ரல் 1 முதல் 20 வரை தானாகவே வவுச்சர் வழங்கப்படுகின்றது. ஆரம்ப கட்டமாக 3.8 மில்லியன் குடும்பங்களுக்கு ஏப்ரல் 1 முதல் மூன்று வாரங்களில் வவுச்சர் அனுப்பப்படும் பின்னர் மே 1 முதல் மேலும் 700,000 குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
தானாக வவுச்சர் பெறாதவர்கள் ஏப்ரல் 1 முதல் தகுதி நிபந்தனைகள் குறித்து மின்னஞ்சல் குறுஞ்செய்தி அல்லது கடிதம் மூலம் அறிவிக்கப்படுவர் மேலும் அவர்கள் விண்ணப்பித்தால் வவுச்சர் வழங்கப்படும்.
ஆற்றல் வவுச்சரின் சராசரி தொகை 153 யூரோக்கள் அதிகபட்சம் 277 யூரோக்கள் வரை இருக்கலாம். இது மின்சாரம், எரிவாயு, வெப்ப எண்ணெய் போன்ற அனைத்து வீட்டு ஆற்றல்களுக்கும் கட்டணமாக பயன்படுத்தலாம். விரும்பினால் சில நிறுவனங்களில் தங்குமிடக் கட்டணங்களுக்கும் பயன்படுத்தலாம்.






























