குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று (26) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று (27) கம்பஹா நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரின் தகவலின் அடிப்படையில், கம்பஹா – வெலிவேரிய பகுதியில் இருந்து ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது. இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளில், குறித்த துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டதென கண்டறியப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, டக்ளஸ் தேவானந்தா நேற்று முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள், இன்று நடைபெறவுள்ள நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading