சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

2026 ஜனவரி 1 முதல் பிரான்சில் பல வருட குடியிருப்பு அனுமதி (Multi-year residence permit), நிரந்தர குடியிருப்பு அட்டை (Resident card) அல்லது பிரெஞ்சு குடியுரிமை (Naturalisation) பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு குடிமக்கள் அறிவுத் தேர்வு (Civic Exam) கட்டாயமாக்கப்படுகிறது.

2024 ஜனவரி 26 அன்று நிறைவேற்றப்பட்ட குடிவரவு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மேம்பாட்டு சட்டத்தின் கீழ் இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சம் 45 நிமிடங்கள் நடைபெறும் இந்த டிஜிட்டல் தேர்வு 40 பல்தேர்வு கேள்விகளைக் கொண்டது (28 பொது அறிவு கேள்விகள், 12 சூழ்நிலை சார்ந்த கேள்விகள்).

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்களில் ஒன்றே சரியானது. தேர்ச்சி பெற 80% மதிப்பெண், அதாவது குறைந்தது 32 சரியான பதில்கள் பெற வேண்டும். இந்தத் தேர்வு, பிரெஞ்சு குடியுரிமை பெறுவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியான நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல வருட குடியிருப்பு அனுமதி அல்லது நிரந்தர குடியிருப்பு அட்டை பெறுவதற்கும் கட்டாயம். இருப்பினும் குடியிருப்பு அனுமதி புதுப்பிப்பு விண்ணப்பம் செய்பவர்கள் மற்றும் அகதி பாதுகாப்பு (International Protection) பெற்றவர்கள் இந்தத் தேர்வில் இருந்து விலக்கு பெறுவார்கள்.

குடியிருப்பு அனுமதி விண்ணப்பிக்கும்முன் 24 மணி நேர குடிமக்கள் பயிற்சி (Civic Training) முடித்து அதன் பின்னர் இந்தத் தேர்வைத் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வுச் சான்றிதழுக்கு காலாவதி இல்லை. தேர்வில் குடியரசின் மதிப்புகள், அரசியல் அமைப்பு குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் வரலாறு–பண்பாடு பிரெஞ்சு சமூக வாழ்வு போன்ற தலைப்புகளில் கேள்விகள் இடம்பெறும்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்