இந்த மாற்றம் சந்தை விலையை அல்லாது ஒழுங்குபடுத்தப்பட்ட மின்சார ஒப்பந்தத்தில் உள்ள சுமார் 2 கோடி குடும்பங்களை பாதிக்கும். சராசரியாக ஒரு குடும்பத்தின் ஆண்டு மின்சார செலவு சுமார் €26 அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஆண்டுக்கு 4.5 MWh மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தின் கட்டணம் €1,046 இலிருந்து €1,072 ஆக உயரும்.
மின்சார விநியோக வலையமைப்பைப் பயன்படுத்தும் கட்டண உயர்வு (TURPE) மற்றும் புதிய திறன் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 1 முதல் 3 kVA திறன் கொண்ட மின்சார இணைப்புகளுக்கும் “Heures Pleines / Heures Creuses” (Peak / Off-Peak) கட்டண விருப்பம் கிடைக்கவுள்ளது. இதற்கு முன்பு இந்த வசதி 6 kVA மற்றும் அதற்கு மேற்பட்ட இணைப்புகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.






























