சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பிரான்சின் டிஜிட்டல் அடையாள சேவையான France Identité புதிய நடைமுறை தொடர்பாக புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி வெளிநாடுகளில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்களும் Overseas பகுதிகளில் வாழ்பவர்களும் தூதரகம், Consulat அல்லது mairie வழியாக தங்கள் டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக FranceConnect வசதி இல்லாததால் பலர் இந்த சேவையை பயன்படுத்த முடியாமல் இருந்தனர். குறிப்பாக Polynésie Française, Nouvelle-Calédonie மற்றும் Wallis-et-Futuna பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது சிரமமாக இருந்தது. தற்போது “face à face identity verification” நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

France Identité மூலம் கிடைக்கும் வசதிகள்
  • அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத்தை மொபைலில் சேமிக்கலாம்
  • Carte Vitale டிஜிட்டல் வடிவில் பெறலாம்
  • FranceConnect மூலம் அரசு சேவைகளில் உள்நுழையலாம்
  • அடையாள சான்றிதழ் உருவாக்கலாம்
  • Carte grise டிஜிட்டல் வடிவில் பயன்படுத்தலாம்
புதிய நடைமுறை எப்படி செயல்படும்?
  1. France Identité App ஐ பதிவிறக்க வேண்டும்
  2. தேசிய அடையாள அட்டையை Scan செய்ய வேண்டும்
  3. NFC மூலம் அடையாள அட்டையை சரிபார்க்க வேண்டும்
  4. “Vérification de l’identité en face à face avec un agent” என்பதை தேர்வு செய்ய வேண்டும்
  5. QR code உருவாகும்
  6. அதனை mairie, ambassade அல்லது consulat-இல் அதிகாரியிடம் காட்ட வேண்டும்

அதன் பிறகு 24 முதல் 48 மணி நேரத்திற்குள் சரிபார்ப்பு முடிவுகள் வரும். அங்கீகாரம் கிடைத்தால் 7 நாட்களுக்குள் இறுதி செயல்முறையை முடிக்க வேண்டும்.

இந்த சேவையை பயன்படுத்த தேவையான நிபந்தனைகள்
  • 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்
  • புதிய format தேசிய அடையாள அட்டை (credit card format CNI) இருக்க வேண்டும்
  • Android 11 அல்லது iOS 16.6 மேல் version கொண்ட smartphone இருக்க வேண்டும்

இந்த France Identité புதிய நடைமுறை முக்கியமாக FranceConnect அணுகல் இல்லாத Overseas மற்றும் வெளிநாட்டு பிரெஞ்சு மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. Métropole இல் வசிப்பவர்கள் ஏற்கனவே FranceConnect அல்லது courrier recommandé முறையை பயன்படுத்த முடிவதால் இந்த face-to-face verification வசதி அவர்களுக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்