France அரசு 2026 நிதி சட்டத்தின் கீழ் வீட்டு வசதி துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய வரி சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 21 பிப்ரவரி 2026 முதல் 31 டிசம்பர் 2028 வரை புதிய apartment வாங்கும் அல்லது குறைந்தது 30% ஆற்றல் (energy) மேம்பாட்டு வேலை செய்யப்பட்ட பழைய apartment வாங்கும் நபர்களுக்கு பொருந்தும்.

இந்த வீட்டை கட்டாயமாக unfurnished (பொருட்கள் இல்லாமல்) வாடகைக்கு விட வேண்டும் மற்றும் அது வாடகையாளரின் முதன்மை குடியிருப்பாக இருக்க வேண்டும். மேலும், இந்த வீட்டை குறைந்தது 9 ஆண்டுகள் வாடகைக்கு விட வேண்டும் மற்றும் அரசு நிர்ணயித்த வாடகை வரம்பை (rent limit) கடைபிடிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த வீட்டை வாடகைக்கு விட அனுமதி இல்லை.

இந்த திட்டத்தின் முக்கிய நன்மை என்னவெனில், வீட்டு உரிமையாளர்கள் ஆண்டுக்கு €12,000 வரை வாடகை வருமானத்திலிருந்து வரி கழிவு (tax deduction) பெற முடியும். மேலும், வீட்டுக்கான செலவுகள் வாடகை வருமானத்தை விட அதிகமாக இருந்தால், ஆண்டுக்கு €10,700 வரை அவர்களின் மொத்த வருமானத்திலிருந்து (சம்பளம், ஓய்வூதியம் போன்றவை) கழித்துக்கொள்ளலாம்.

இதனால் அவர்கள் செலுத்த வேண்டிய வரி தொகை குறிப்பிடத்தக்க அளவில் குறையும். இந்த திட்டத்தின் மூலம் பிரான்ஸ் அரசு மலிவான வாடகை வீடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்களுக்கு வீட்டு வசதியை எளிதாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading