அரசின் விளக்கத்தின் படி இறக்குமதி செலவுகள், வரி கட்டமைப்பு, போக்குவரத்து செலவுகள் மற்றும் சேமிப்பு–விநியோகச் செலவுகள் ஆகியவை காரணமாக உள்ளூர் விலையில் உடனடி குறைப்பு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக சந்தை விலை மாற்றங்கள் அனைத்தும் நேரடியாக உள்ளூர் சந்தையில் பிரதிபலிக்காது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் எரிபொருள் விலை குறைப்பது தொடர்பான எதிர்பார்ப்பு தற்போதைக்கு நிறைவேறாது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக போக்குவரத்து செலவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் தொடர்ந்த தாக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் எரிபொருள் விலை குறைப்பு குறித்து எதிர்பார்த்திருந்த நிலையில் அரசின் இந்த அறிவிப்பு மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை எதிர்காலத்தில் சந்தை நிலைமையை பொருத்து விலை திருத்தம் செய்யப்படலாம் எனும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.



























