சுயதொழில் செய்து வரும் ஓவியரும் அலங்காரப் பணியாளருமான 38 வயது சீன் லிட்டில், தனது மனைவி நடாலி மற்றும் 13 வயது மகள் சார்லட்டிடம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றுள்ளார். இது முதலில் தனது TikTok கணக்குக்காக உருவாக்கப்பட்ட நகைச்சுவை முயற்சி என அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டு வேலைகளுக்கு விலக்கு கேட்ட ரசிகர்
ஒப்பந்தப்படி, சீனை வீட்டு வேலைகளுக்கு அழைக்கவோ, அவர் நீண்ட நேரம் விளையாடுவதைப் பற்றி கருத்து தெரிவிக்கவோ, விளையாட்டின் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவோ கூடாது. சமையல் செய்யப் போவதில்லை என்பதால், சிற்றுண்டி உணவுகளை வாங்குவதற்காக நடாலிக்கு கூடுதல் பணமும் வழங்கியுள்ளார்.
நடாலிக்கு 50 பவுண்டுகளும், சார்லட்டுக்கு 20 பவுண்டுகளும் வழங்கிய சீன், குடும்பச் செலவுக்கான தனது வாராந்திர பங்களிப்பை 500 பவுண்டுகளாக உயர்த்தியுள்ளார். பாத்திரம் கழுவும் பணியையும் தவிர்க்க அவர் காகிதத் தட்டுகளை வாங்கியுள்ளார்.
முதல் GTA விளையாட்டை இளமைப் பருவத்தில் விளையாடியதாகக் கூறும் சீன், GTA 5 வெளியானதிலிருந்து 13 ஆண்டுகளாக புதிய வெளியீட்டுக்காகக் காத்திருப்பதாக தெரிவித்தார். அவர் வார இறுதிகளிலும் தினமும் 13 மணி நேரம் வரை வேலை செய்து, இந்த ஒரு வார இடைவெளிக்காக பணம் சேமித்துள்ளார். GTA 6 non-interference contract குறித்து பிறர் என்ன நினைத்தாலும் கவலைப்படவில்லை என்றும், தானும் தனது குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
































