Antonov An-12 வகையைச் சேர்ந்த அந்த விமானம் வழக்கமான பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விமானம் மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கெமெரோவோ பிராந்தியத்தில் உள்ள யகுனோவோ கிராமத்துக்கு அருகே இந்த விபத்து இடம்பெற்றதாக ஆளுநர் இலியா செரெடியுக் கூறியுள்ளார்.
விமான விபத்து குறித்து விசாரணை
விபத்துக்கான காரணம் தொடர்பான ஆரம்ப சந்தேகமாக தொழில்நுட்பக் கோளாறு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதனை உறுதிப்படுத்த மேலதிக விசாரணை தேவைப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தீயணைப்பு வாகனங்களும் ஆம்புலன்ஸ்களும் காணப்பட்டதாக வெளியிடப்பட்ட காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் அனைத்து சூழ்நிலைகளையும் கண்டறிய ரஷ்ய விண்வெளிப் படைகளின் ஆணையம் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகிறது. Russian military transport plane crash தொடர்பான விசாரணை முடிவுகள் வெளியான பின்னரே, விபத்துக்கான முழுமையான காரணம் தெளிவாகும்.
































