பாலிவுட் பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஹரி பாக்ஸரை மும்பை போலீஸார் தேடி வந்தனர். நடிகர்கள் துஷார் கபூர், ரன்வீர் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. கடந்த மாதம் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்குத் தேவையான ஆயுத உதவிகளை செய்ததாகவும் ஹரி பாக்ஸர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை
டெல்லி மற்றும் ஹரியானா போலீஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் அமெரிக்க அதிகாரிகள் ஹரி பாக்ஸரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை (Hari Boxer arrested in California) லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஹரி பாக்ஸர், வெளிநாட்டில் இருந்து அந்தக் கூட்டத்தின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜெய்ப்பூரில் தங்கி இருந்தபோது பாக்ஸிங் கற்றுக்கொண்ட அவர், பின்னர் தனது பெயரை ஹரி பாக்ஸர் என மாற்றிக்கொண்டார். அவருக்கு எதிராக ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று அமெரிக்காவில் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





























