இந்த ஒப்பந்தம் அக்டோபர் 22ஆம் தேதி, இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா முன்னிலையில் கையெழுத்தானது. கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையகம் வெளியிட்ட தகவலின்படி, சர்வதேச ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இலங்கை தொழில்துறைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதே கூட்டாண்மையின் முக்கிய நோக்கமாகும்.
ஒப்பந்தத்தின் கீழ் முன்னுரிமை பெறும் துறைகள்
புதுமை மற்றும் தொடக்கநிறுவனங்களுக்கான அடைகாப்பு, பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக ஆய்வகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித மையத் தீர்வுகள் ஆகியவை ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளாகும். இதனுடன், தொழில்துறை திறன்கள் மற்றும் திறமையான மனிதவள மேம்பாடு, சர்வதேச அறிவுப் பகிர்வு ஆகியவையும் இடம்பெறுகின்றன.
இந்த IIT Madras Dialog Axiata MoU ஒப்பந்தத்தில் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் எம். ஜே. சங்கர் ராமனும், டயலொக் ஆக்சியாட்டா பிஎல்சியின் குழும தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சுபுன் வீரசிங்கேயும் கையெழுத்திட்டனர்.
நிகழ்வின்போது சந்தோஷ் ஜா, டயலொக் ஆக்சியாட்டாவின் மூத்த நிர்வாகிகளுடன் தொழில்நுட்பம், வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள் மற்றும் நம்பகமான கூட்டாண்மைகள் குறித்து கலந்துரையாடினார். இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என இந்திய உயர் ஆணையகம் தெரிவித்துள்ளது.































